"நெஞ்சுக்கு நீதி" நன்றி தெரிவிக்கும் விழா.. சமுதாய கருத்துள்ள படங்களில் நடிக்க ஆசை - உதயநிதி ஸ்டாலின்

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து சமுதாய கருத்துள்ள படங்களில் நடிக்க வேண்டும் என தனது ஆசையை வெளிபடுத்தினார்.

"நெஞ்சுக்கு நீதி" நன்றி தெரிவிக்கும் விழா.. சமுதாய கருத்துள்ள படங்களில் நடிக்க ஆசை - உதயநிதி ஸ்டாலின்

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து, சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின், ஆரி, மயில்சாமி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,  தயாரிப்பாளர் போனி கபூருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, படத்தில் நான் ஹீரோவாக இருந்தாலும் ஆரியின் அறிமுக காட்சிக்கே திரையரங்கில் கைத்தட்டல் அதிகமாக இருந்ததாக கூறினார். மாமன்னதான் தன்னுடைய கடைசி படமா என பலர் கேட்பதாக கூறிய அவர், தனது நடிப்பில் 4 படங்கள் வெளிவர உள்ளதாக தெரிவித்தார். நல்ல கதைகளை கேட்டு வருவதாகவும், சமுதாய கருத்துள்ள படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாகவும் கூறினார்.

அதன் பிறகு பேசிய நடிகர் மயில்சாமி, இந்தி தேசிய மொழியல்ல, மற்றொரு மாநில மொழி எனவும், உள்ளூர் விமானங்களில் தமிழ் தெரிந்த பெண்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, இப்படத்தின் கருத்து யாராவது ஒருவருக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் அதுதான் எங்களுக்கு கிடைத்த விருது என இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தெரிவித்தார்.