போர்ப்ஸ் பத்திரிகை அட்டையில் நயன்தாரா..!!!

போர்ப்ஸ் பத்திரிகை அட்டையில் நயன்தாரா..!!!

கோலிவுட் வட்டாரத்தின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் துணிச்சலான பல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து, தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். 

நயன்தாராவுக்கு, புதிய கவுரவம் ஒன்றை சர்வதேச அளவிலான போர்ப்ஸ் பத்திரிக்கை அளித்துள்ளது. 

போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நயன்தாராவின் ஸ்டைலான புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதையடுத்து நடிகை நயன்தாராவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.