விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா.!!

விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா.!!

தமிழ் திரையுலகில் லேடி சுப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் காமெடி ரொமான்ஸ் ஜெனரில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியாகி உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 18-ம் தேதி ‘டூ.. டூ.. டூ’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா. 
மேலும் அவர் அந்த பதிவில் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என குறிப்பிட்டுள்ளார்.