’மாமன்னன்’ திரைப்படம் அல்ல, நிஜம்” -வடிவேலு பேச்சு!

’மாமன்னன்’ திரைப்படம் அல்ல, நிஜம்” -வடிவேலு பேச்சு!

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'மாமன்னன்' திரைப்படம் அல்ல நிஜம் என நடிகா் வடிவேலு தொிவித்துள்ளாா். 

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள "மாமன்னன்" திரைப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் (01.06.2023) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், கவின், விஜய் ஆண்டனி, சூரி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,  சந்தோஷ் நாராயணன், போனிகபூர், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாண்டிராஜ், ஏஆர் முருகதாஸ், பா ரஞ்சித், ஹெச் வினோத், விக்னேஷ் சிவன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க : மாமன்னன் இசை வெளியீட்டு விழா...!

மேலும் இதுவரை காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக பார்த்த நடிகர் வடிவேலு, இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்லுக் போஸ்டர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகா் வடிவேலு, நடிகா் கமல்ஹாசனிடம் கற்று கொண்டதை தான் மாமன்னன் படத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக தொிவித்தாா். தொடா்ந்து பேசிய அவா், 'மாமன்னன்' திரைப்படம் வெறும் படம் அல்ல நிஜம் எனவும், இந்த படத்தில் ஏ.ஆா்.ரகுமான் தான் பாடல் பாட வைத்தாா் எனவும் குறிப்பிட்டாா். மேலும் அவா் வாங்கிய ஆஸ்கார் விருதில் தனக்கு சிலவற்றை கொடுத்தது போல் இருந்ததாகவும் அவா் நகைச்சுவையாக தொிவித்தாா்.