பார்வையற்றவர்களுக்காக மாயோன் டீசர்... மிரள வைக்கும் வைரல் வீடியோ!

பார்வையற்றவர்களுக்காக மாயோன் டீசர்... மிரள வைக்கும் வைரல் வீடியோ!

பார்வையற்றவர்களுக்காக பிரத்யேகமான டீசரை வெளியிட்டுள்ளது மாயோன் படக்குழு. 

கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். இவரது நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள திரைப்படம் தான் மாயோன்.

இந்த படத்தினை என் கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. படத்தின் டீசர் மிரட்டலாக இருப்பதாக டீசரை பார்த்தவர்கள் கமெண்ட் செய்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மாயோன் படக்குழு புது முயற்சியாக பார்வையற்றவர்களுக்காக பின்னணி குரலுடன் பிரத்தியேக டீஸர் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.