சிங்கிள் ஷாட்டில் 'லியோ' சண்டைக்காட்சி!!

சிங்கிள் ஷாட்டில் 'லியோ' சண்டைக்காட்சி!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் சிங்கிள் ஷாட்டில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், விஜய் நடிப்பிலும் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தொழிற்சாலையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், "நான் ரேடி தான்" பாடலில் குறிப்பிட்ட ஒரு சில வரிகள் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க || போக்குவரத்து கழகங்களுக்கு தற்சார்பு இயக்குநர்கள் நியமனம்!