லியோ: “ரசிகர்கள் படம் பார்க்க வேண்டாம்” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

லியோ:  “ரசிகர்கள் படம் பார்க்க வேண்டாம்” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

லியோ படத்தின் டிக்கெட்டை கூடுதல் விலை கொடுத்து ரசிகர்கள் பார்க்க வேண்டாம்  என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,:-  'லியோ' படத்தின் ட்ரெய்லரில் இருந்த சர்ச்சைக்குரிய வார்த்தை படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், லியோ படத்தில் ஆபாச வசனம் பேசியது நடிகர் விஜய் அல்ல. கதாபாத்திரம் மட்டுமே என்றும் விளக்கம் அளித்தார். 

தனக்கும், விஜய்-க்கும் இடையேயான நல்ல புரிதல் இருப்பதால் படம் சிறப்பாக வந்துள்ளதாக குறிப்பிட்ட லோகேஷ் கனகராஜ், லியோ திரைப்படத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும் நடிகர் அஜித்தை வைத்து படம் எடுப்பது மிக பெரிய ஆசை என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க   | "விவசாயத்தை காக்க நிலவில் ஆய்வு செய்து வருகிறோம்" - முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை