”செனோரிட்டா-வாக மாறிய த்ரிஷா” இணையத்தையே கலக்கும் க்யூட் வீடியோ..

தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா சற்று முன்  வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

”செனோரிட்டா-வாக மாறிய த்ரிஷா” இணையத்தையே கலக்கும் க்யூட் வீடியோ..

தமிழில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா . அதன்பின் அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக  மார்க்கெட் சற்றும் குறையாமல் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாகவே இருந்து வருபவர் நடிகை த்ரிஷா. அவர் தற்போது ’பொன்னியின் செல்வன்’ உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் பிஸியாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் த்ரிஷாவுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அவ்வப்போது அவர் பதிவு செய்யும் வீடியோக்களும், புகைப்படங்களும் பெரிய அளவில் வைரலாகும்.

இந்நிலையில் தற்போது மெக்சிகோவில் இருக்கும் த்ரிஷா, அங்கிருந்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அதில்  ‘எல்லோரும் என்னை செனோரிட்டா’ என்று அழைக்கின்றார்கள்’ என்று கேப்ஷனாக போட்டு அவர் பதிவு செய்துள்ள நிலையில், அந்த  வீடியோ தற்போது  இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

View this post on Instagram

A post shared by Trish (@trishakrishnan)