தனுஷிற்கு ஐஸ்வர்யா - அம்மா லதா இணைந்து வைத்த செக்...? வசமாக மாட்டிக்கொண்ட தனுஷ்...?

தனுஷிற்கு ஐஸ்வர்யா - அம்மா லதா இணைந்து வைத்த செக்...? வசமாக மாட்டிக்கொண்ட தனுஷ்...?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை தான் பிரிய முடிவு செய்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. 

இதனையடுத்து இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்ப உறுப்பினர்கள் உள்பட பலரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இதற்கிடையில் இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்களை கூறி கிசுகிசுத்து வருகின்றனர். அதில் ஒன்றாக தனுஷ் - ஐஸ்வர்யா இடையே பிரச்சினை தொடங்கியதே தனுஷ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பின்புதான் என்று சொல்லப்படுகிறது.

அவர் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தில் அவருக்கு பிடித்த நடிகைகளை தனது தயாரிப்பில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்து வந்ததால் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்துள்ளதாக தகவல் கூறுகிறது. இதனையடுத்து இவரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட   பெருநஷ்டம் காரணமாக கடன் சுமையால் தவித்து வந்துள்ளார். அந்த சூழ்நிலையில் தான் தனுஷின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர் ரஜினிகாந்த் சம்பளம் வாங்காமல் ‘காலா’ படம் நடித்து கொடுத்து கடன் சுமையை குறைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்ததால், இருவரையும் இணைக்க பேச்சுவார்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐஸ்வர்யா தனுஷ்கூட சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் தனுஷ் பிடிவாதமாக மறுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், தனுஷிடம் சில கோரிக்கைகளை ஐஸ்வர்யா வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ‘நீங்க கடனாளியாக இருந்த போது என் அப்பா தான் உதவினார். அவர் மகள் என்னை வேண்டாம் என முடிவு செய்த பின்பு ‘காலா’ படத்தில் எங்க அப்பா நடித்ததற்கு அவருக்கு கிடைக்க வேண்டிய தொகையை தர வேண்டும்’ என்று தனுஷை இறுக்கி பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து எப்படி இவ்வளவு பெரிய பணத்தை அவருக்கு கொடுப்பது என்று விழிபிதுங்கி தனுஷ் சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஐஸ்வர்யாவிற்கு இந்த ஐடியா கொடுத்ததே அவரது தாயார் லதா தான் என்று சொல்லப்படுகிறது.