பிரபல நடிகர் கையில் ராக்கி கயிறு கட்டி அண்ணனாக்கிய கீர்த்தி சுரேஷ்.. வைரல் புகைப்படம்

தெலுங்கில் ரீமேக் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதை உறுதியாகி உள்ளது.

பிரபல நடிகர் கையில் ராக்கி கயிறு கட்டி அண்ணனாக்கிய கீர்த்தி சுரேஷ்.. வைரல் புகைப்படம்

2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் வேதாளம். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சுருதிஹாசனும், தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமேனனும் நடித்திருந்தனர்.

தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தில், சிரஞ்சீவி அஜித் வேடத்திலும், லட்சுமேனனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதும் உறுதியாகிஉள்ளது

படக்குழுவினர், சிரஞ்சீவிக்கு கீர்த்தி சுரேஷ் ராக்கி கயிறு கட்டுவது போன்ற போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதை உறுதியாகி உள்ளது.

சிரஞ்சீவி நடிக்கும் படத்திற்கு போலா சங்கர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை சிரஞ்சீவியின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டார்.