சென்னை வந்தது...! கர்நாடக சிங்கம்...!!

சென்னை வந்தது...! கர்நாடக சிங்கம்...!!

கர்நாடகாவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண் சிங்கம் ஒன்று கொண்டுவரப் பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் பரமாரிக்கபட்டு வருகின்றனர். இதனைக் காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். 

பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு  விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் அனுமதி பெற்று மற்ற மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் செய்து முதல்கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஆண் சிங்கம் சாலை மார்க்கமாக வாகனத்தின் மூலம் பாதுகாப்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு  கொண்டுவரப்பட்டது. இதற்கு பதிலாக கர்நாடக  உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஆண் வெள்ளை புலி வழங்கப்பட்டது.

மேலும் தற்போது கொண்டுவரப்பட்ட ஆண் சிங்கத்தை தனி கூண்டில் வைத்து அதற்கு பூங்கா மருத்துவர்கள் அனைத்து பரிசோதனைகளையும் செய்து வருகின்றனர். சில வாரங்களில் மற்ற சிங்கங்களுடன் பழகிய பிறகு சிங்கங்களின் உலாவிடங்களில் பார்வையாளர்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்  என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்
படுகின்றன.