சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்... கமல் உருக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்து உள்ளார்.

சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்... கமல் உருக்கம்

இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும்,நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் 16 மொழிகளில் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது.

அவரின் நினைவு நாளை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள் எஸ்.பி.பி பற்றிய அழகான நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் கமல் தனது முகநூல் பக்கத்தில், ‘ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர்.

அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்’ என்று அவரோடு இருந்த நினைவுகளை உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.