பிரபல நடிகர் டிகாப்ரியோவுக்கு மிரட்டல் விடுத்த ஜெஃப் பெசோஸ் - வைரலாகும் பதிவு

லியோனார்டோ டிகாப்ரியோவுடன் ஜெஃப் பெசோஸ் காதலி நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் டிகாப்ரியோவுக்கு மிரட்டல் விடுத்த ஜெஃப் பெசோஸ் - வைரலாகும் பதிவு

லியோனார்டோ டிகாப்ரியோவுடன் தனது காதலி நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் டிகாப்ரியோவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஜெஃப் பெசோஸ் பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோசின் காதலி, நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் நெருக்கமாக பேசுவது போன்ற வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது. இதனை பார்த்து கடுப்பான ஜெஃப் பெசோஸ், டிகாப்ரியோவுடன் மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மிகவும் ஆபத்தான பள்ளத்தாக்கு என்ற எச்சரிக்கை பலகை மீது சாய்ந்து நின்றபடி இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, லியோ ”நான் உனக்கு ஒன்றை காட்ட விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.