’தளபதி 66’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா! அதுவும் நாளைக்குன்னா...!

நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

’தளபதி 66’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா! அதுவும் நாளைக்குன்னா...!

தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய்யின், ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து நடிகர் விஜய், வம்சி இயக்கும்  ‘தளபதி 66’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தில்ராஜீ தயாரிக்கிறார். ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் முக்கிய கேரக்டரில் நடிகர் சரத்குமார், பிரபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளனர்.

ஏற்கனவே ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் ஐதராபாத் சென்றதாக செய்திகள் வெளியானது. அதன்படி ‘தளபதி 66’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதனிடையே இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நாளை முதல் சென்னையில் ’தளபதி 66’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படப்பிடிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதற்கான ஆயத்தப்பணிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இரண்டாவது பாடலின் படப்பிடிப்பும் சென்னையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பின் போது ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.