என்னது தளபதி விஜய் நேர்காணலில் கலந்து கொள்கிறாரா..? அப்போ..கண்டிப்பா ட்ரீட் இருக்கு..?

என்னது தளபதி விஜய் நேர்காணலில் கலந்து கொள்கிறாரா..? அப்போ..கண்டிப்பா  ட்ரீட் இருக்கு..?

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வந்தது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே நேற்று வெளியான தகவல் ஒன்று விஜய் ரசிகர்கள் அனைவரையும் கலக்கமடைய செய்தது என்றே சொல்லலாம். அட ஆமாங்க... பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இந்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை, என நேற்று தகவல்  பரவியது. 

இந்த தகவலை கேட்டு கவலை அடைந்த ரசிகர்கள் தளபதி விஜய்யின் ஸ்பீச்-யை பார்க்கமுடியவில்லையே  என்று கூறிவந்தனர்.  அவர்களின் மன வருத்தத்தை போக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது சன் டிவி நேர்காணலில் பீஸ்ட் படக்குழுவினருடன் நடிகர் விஜய்  கலந்து கொள்ள இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.