என்னது அஜித்தின் விஸ்வாசம் படம் காப்பியா..? அடுத்த அட்லீயா...கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்ஸ்

என்னது அஜித்தின் விஸ்வாசம் படம் காப்பியா..? அடுத்த அட்லீயா...கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்ஸ்

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ்காக காத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில்  நான்காவது முறையாக அஜித் நடித்து வெளியான திரைப்படம் விஸ்வாசம். நயன்தாரா, தம்பி ராமையா, அனிகா என முக்கிய நட்சத்திரங்களோடு உருவாகியிருந்த விஸ்வாசம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

இதனைத்தொடர்ந்து  விஸ்வாசம் திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த 'துளசி' படத்தின் காப்பி என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேட்ட அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தெலுங்கில் கடந்த 2007ஆம் ஆண்டு வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் துளசி. இந்த படத்தில் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளும், வெங்கடேஷின், அடிதடி சண்டைகளை பார்த்து தனது குழந்தையுடன் வேறொரு ஊருக்கு நயன்தாரா சென்று விடுகிறார். அதன்பின் அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடி சென்று, வெங்கடேஷ் அவர்களுடன் இணைகிறார். இப்படி தான் துளசி படத்தின் கதையம்சம்  அமைந்திருக்கும்.

அதேபோல தான் விஸ்வாசம் படத்திலும் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் இணைவார். அதனால் சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் படம் காப்பி தான் என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது. 
மேலும் சிலர், இதுவரை பிரமாண்ட இயக்குனர் அட்லீ தான் காப்பி அடித்து படம் பண்ணுவார் என்று பார்த்தால், சிறுத்தை சிவாவும் காப்பிதானா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.