KGFஐ வார்த்தெடுத்த 19 வயது பொடியன்! தரமான எடிட்டிங்கால் ரசிகர்களை வியக்க வைத்த இளைஞர்..!!

கே.ஜி.எஃப். பாடலை தனது ஸ்டைலில் எடிட் செய்த சிறுவன்...

KGFஐ வார்த்தெடுத்த  19 வயது பொடியன்! தரமான எடிட்டிங்கால் ரசிகர்களை வியக்க வைத்த இளைஞர்..!!

கே.ஜி.எஃப். முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இரண்டாம் பாகமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கதைக்களம் பெரியது என்பதால், உழைப்பும் பெரியதே. ஆனாலும், இப்படத்தின் படத்தொகுப்பாளர் வெறும் 19 வயதே நிரம்பிய இளைஞர் என்பது ஆச்சரியம். அசாத்திய திறமை படைத்த உஜ்வால் குல்கர்னி பற்றி தற்போது பார்க்கலாம்.

கே.ஜி.எஃப். படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம், படத்தின் நான் லீனியர் நரேஷனும், அச்சுப்பிசகாத எடிட்டிங்கும் என்றால், அது 200 சதவீதம் உண்மை. ஆனால், சாப்டர் 2 படத்தில் எடிட்டராக இணைந்த போது அந்த சிறுவனின் வயது வெறும் 17 தான் என்றால் நம்ப முடிகிறதா? 

கே.ஜி.எஃப். என்றால் மாஸ்... கே.ஜி.எஃப். என்றால் ஆக்சன்... கே.ஜி.எஃப். என்றால் தனி பிராண்ட்... என்று தான் எல்லோரும் சொல்வார்கள். ஒன்றுமில்லாத ஒரு சிறுவன், எப்படி ஒரு ராஜ்ஜியத்தைப் பிடிக்கிறான் என்பது தான் கே.ஜி.எஃப். படத்தின் ஒன் லைன். விடாமுயற்சியும், தைரியமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை திரையில் காட்டிய இதே படத்தில், சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார், 19 வயதே நிரம்பிய உஜ்வால் குல்கர்னி.

மிரட்டலான ஒரு கேங்ஸ்டர் படத்தை, உலகத்தரத்தில் செதுக்கி கொடுத்துள்ள உஜ்வால், கே.ஜி.எஃப். சாப்டர் 2 படத்தில் கமிட்டான போது அவருக்கு வயது வெறும் 17. இயக்குநர் பிரசாந்த் நீலின் முதல் படமான ’உக்ரம்’ படத்தின் எடிட்டரான ஸ்ரீகாந்த் கெளடா தான், கே.ஜி.எஃப். முதல் பாகத்தையும் எடிட் செய்திருந்தார். ஆனால், இரண்டாம் பாகத்தை எடிட் செய்யும் வாய்ப்பு உஜ்வால் என்ற பொடியனுக்கு கிடைத்த விதமே மிகவும் சுவாரஷ்யமானது.

3 ஆண்டுகளுக்கு முன்பு, கே.ஜி.எஃப். முதல் பாகத்தின் பாடலை, தன்னுடைய ஸ்டைலில் எடிட் செய்து அப்லோட் செய்திருந்தான் உஜ்வால். அதனைப் பார்த்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு, வீடியோ மிகவும் பிடித்துப் போகவே, 17 வயதான அந்த சிறுவனிடம், கே.ஜி.எஃப். இரண்டாம் பாகத்திற்கான ட்ரைலரை எடிட் செய்யும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். உஜ்வாலின் டிரைலர் கட்டைப் பார்த்த பிரசாந்த் நீல், அடுத்த கனமே மொத்த படத்திற்கான வேலையையும், அந்த சிறுவனை நம்பி ஒப்படைத்துள்ளார். 

அடுக்கடுக்கான வில்லன்கள், ஏராளமான கிளைக்கதைகள், ஏகப்பட்ட டீட்டெயிலிங், நான்லீனியர் நரெநெஷன் என மேக்கிங்கில் பல தலைவலிகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் அசால்ட்டாக டீல் செய்து, உலக சினிமா ரசிகர்களை, புருவத்தை உயர்த்தி பார்க்கச் செய்திருக்கிறார் உஜ்வால்.