நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்...யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்...விவரம் இதோ...?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் யார் யாரெல்லாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்...யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்...விவரம் இதோ...?

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். இப்போது ஒரு வழியாக ஜூன் 9ம் தேதியன்று திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணத்தில் சிறப்பு விருந்தினராக யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ஜீன் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இவர்களது திருமண வரவேற்பிற்கு  சினிமா மற்றும் முக்கிய பிரமுகர்கள் என மொத்தமாகவே 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருக்கிறார்களாம்.  இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரபலங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், , தளபதி விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சமந்தா, நெல்சன் திலீப் குமார் ஆகியோருக்கு திருமண அழைப்பிதழ் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு மறுநாள் ஜூன் 9 ஆம் தேதி அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் இவர்களின் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் திருமணத்திற்கு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இருவரின் திருமண வரவேற்பில் அஜித், விஜய் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதால் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதனையடுத்து இவர்களின் திருமணம் நிச்சயம் ஒரு கண்ணைக் கவரும் நிகழ்வாகவே இருக்கும் என்று கூறி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப்பிரபலங்களும் இவர்களின் திருமண நாளை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.