'விக்ரம்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

கமல் நடிப்பில் வெளியான ’விக்ரம்’ திரைப்படத்தின் நேற்றைய வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

'விக்ரம்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை ‘விக்ரம்’ திரைப்படம் பூர்த்தி செய்யுமா என்ற கேள்விக்கு இடமே கொடுக்காத வகையில் நேற்று வெளியாகி தியேட்டரையே சத்தத்தால் அலறவிட்டது.

விக்ரம் படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த அனைவரும் முழுக்க முழுக்க வெறும் பாசிட்டிவ் கமெண்ட்டுகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தனர். இப்படி மீடியா, சோஷியல் மீடியா என எங்கு பார்த்தாலும் ‘விக்ரம்’,  ’விக்ரம்’ என படத்தை கொண்டாடி வருகின்றனர். கே.ஜி.எப் 2-க்கு அடுத்தபடியா இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் படமாக விக்ரம் அமையும் என்றும் கூறப்படுகிறது.  

இந்நிலையில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் நேற்றைய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளிலும் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், அதில் தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று ஒரு நாளிலேயே 34 கோடி வசூல் செய்த இப்படம் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் நல்ல வசூல் சாதனையை ஈட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றது. அதே சமயம் கேஜிஎப் 2 திரைப்படத்தின் சாதனையை 'விக்ரம்’ முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...