”நான் நிறைய இடங்களில் கோழையாக இருந்துருக்கிறேன்” பிரபல நடிகர் பேட்டி..!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றில் ”நான் நிறைய இடங்களில் கோழையாக இருந்துருக்கிறேன்” என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”நான் நிறைய இடங்களில் கோழையாக இருந்துருக்கிறேன்” பிரபல நடிகர் பேட்டி..!

பிரபல ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் தன் நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற இவர், அந்நிகழ்ச்சியில் தனது மனைவியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததற்காக தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்தார். அப்போது இந்த சம்பவம் இணையதளங்களில் பேசுப்பொருளானது.

இதனையடுத்து அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் வில்ஸ்மித், ’நான் நிறைய இடங்களில் கோழையாக இருந்துருக்கிறேன்’ என்ற பரபரப்பு தகவலை பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில், “நான் எனது வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தில் கோழையாக இருந்துள்ளேன்; அதுவும் குறிப்பாக எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது என்னுடைய அப்பா என்னுடைய அம்மாவை தினந்தோறும் அடிப்பார்; ஆனால் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேனே தவிர; அவரை எதிர்த்து தட்டி கேட்க கூட முடியாத அளவுக்கு கோழையாக நான் இருந்தேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.