கமல் படத்தில்  இணையும் 'ஹாலிவுட்' சண்டைக்கலைஞர்கள்..!!

கமல்ஹாசனின் நடிப்பில் கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட பக்கா கமர்சியல் ஆக்சன் படமாக உருவாகும்  ‘விக்ரம்’ படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை முழுவேகத்தில் தொடங்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது  அதிரடி டுவீட் ஒன்றையும்  வெளியிட்டுள்ளார்.  

கமல் படத்தில்  இணையும் 'ஹாலிவுட்' சண்டைக்கலைஞர்கள்..!!

கபாலி,  கேஜிஎஃப்,  கைதி, ராதே,  உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநர்களாக பணியாற்றிய அன்பு அறிவு (இரட்டையர்கள்)  விக்ரம் படத்திற்காக இணைந்துள்ளனர் என்கிற அதிரடி  அறிவிப்பை புகைப்படத்துடன்  வெளியிட்டுள்ளார். 

இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் அரசு மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கும் பட்சத்தில் முதலில் விக்ரம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், கோர்ட் தீர்ப்பை பொறுத்து கமல், இந்தியன்-2 படத்திலும் நடிக்கலாம் என்கிறார்கள் ஆக இப்போதைக்கு கமலுக்கு பாபநாசம்-2 படத்தில் நடிக்கும் எண்ணம் எதுவும் கிடையாது என்கிறது கமல் தரப்பு.

விக்ரம் படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சி உலக ஆக்சன் சினிமாக்களை மிஞ்சும் வகையில் படமாக்கப்படவுள்ளதாம். இக்காட்சியை  பிரபல ஹாலிவுட் சண்டை இயக்குநர்களுடன் அன்பறிவு மாஸ்டர்கள் இணைந்து வடிவமைக்க உள்ளனராம்.