வெளியானது ராஷ்மிகா அமிதாபின் ‘குட் பை’ ஃபர்ஸ்ட் லுக்:

மனதை உருக்கும் ஒரு குடும்பக் கதையாக அமைந்த ‘குட் பை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளியானது ராஷ்மிகா அமிதாபின் ‘குட் பை’ ஃபர்ஸ்ட் லுக்:

விகல் பால் இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன் நடிக்கும் ‘குட் பை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெலியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படத்தின் தயாரிப்பாளர் தரண் ஆதர்ஷ், படம் வெளியீடு குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.

நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டம் கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் என்ற பான் இந்திய படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, பலரது வாழ்த்துகளைக் குவித்தார்.

இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய நடிகரான அமிதாப் பச்சனுடன் இணைந்து குட் பை என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தான் ராஷ்மிகாவிற்கு, பாலிவுட்டில் கால்தடம் பதிக்க வைக்கும் முதல் படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கலகலப்பாக இருக்கும் இந்த போஸ்டரில், ராஷ்மிகாவும் அமிதாப் பச்சனும் அருகில் உட்கார்ந்து, பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல இருக்கிறது. மேலும், நீனா குப்தா, பவயில் குலாட்டி, சுனில் க்ரோவர், சாஹில் மேதா ஆகியோரும் அமர்ந்துள்ளனர். ராஷ்மிகாவின் முதல் பாலிவுட் படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.

விகாஸ் பாலின் இயக்கத்டில் உருவான இந்த படம், ஏக்தா கப்பூரின் பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் மற்றும், குட் கம்பெனி இணைந்து வெளியிட உள்ளனர். இந்த படம், வருகிற அக்டோபர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், மனமுருக வைக்கும் ஒரு குடும்ப படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக அமிதாப் பச்சனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனாவிற்கு அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தைத் தொடர்ந்து, புஷ்பா தி ரூல் என்ற பான் இந்தியா படத்தின் இரண்டாம் பாகத்திலும், ரன்பீர் கப்பூருடன் ‘அனிமல்’ மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து ‘மிஷன் மஜ்னு’ ஆகிய இந்தி படங்களிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.