முதல் முறையாக ஹீரோவாக களமிறங்கும் கோலி சோடா பட பிரபலம்.!!!

முதல் முறையாக ஹீரோவாக களமிறங்கும் கோலி சோடா பட பிரபலம்.!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் நடிகர் என பல பரிமாணங்களில் வலம் வரும் பிரபுதேவாவின் உதவியாளர் கலைமாமணி புதிதாக படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இப்படத்தை தமிழில் ஏராளமான படங்களை தயாரித்து வரும் முன்னனி நிறுவனமான JKவின் JFL புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதில் நாயகனாக பசங்க, கோலி சோடா போன்ற படங்களில் நடித்த ஸ்ரீராம் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனான்டாள் பிலிம்ஸ்முரளி, மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் ரத்ன சிவா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ஆகியோர் பங்கேற்றனர்.