நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் கோல்டன் விசா.!! 

நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு

நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் கோல்டன் விசா.!! 

நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக அரசு அறிமுகப்படுத்தியது.

அந்த சலுகையை திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு வழங்கி வருகின்றனர். 

அந்தவகையில் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.  

துபாய்க்கு சென்று நேரடியாக இந்த விசாவை பெற்று வந்துள்ளார் மீரா ஜாஸ்மின். 

இதற்கிடையில் 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் மீண்டும் மீரா ஜாஸ்மின் நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.