பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று!! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...கவலையில் இசை ரசிகர்கள்

கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததால் ரசிகர்கள் கவலை...

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று!! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...கவலையில் இசை ரசிகர்கள்

இந்திய திரையுலகின் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி இசை ரசிகர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ‘இசைக்குயில்’ என வர்ணிக்கப்படுபவர் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். இவர் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். மேலும் ஆங்கிலம் உட்பட வெளிநாட்டு மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியவர் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். 92 வயதாகும் லதா மங்கேஷ்கர்  தனது 13ஆம் வயதில் இருந்து தொடங்கி சுமார் 70 வயது வரையிலும்  பாடிவந்தார். இப்படி அயராது பாடி வந்த லதா மங்கேஷ்கரின் பெயர்  கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றதோடு பாரத ரத்னா, பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.  இதனையடுத்து உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருக்கு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதாகவும், இதனை அடுத்து அவருக்கு கொரோனா தொற்றுக்கு  உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி இசை ரசிகர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லதா மங்கேஷ்கர் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.