மூன்றாவது திருமணத்திற்கு தயாரானார் பிரபல பாடகி!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், 3-வது திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.

மூன்றாவது திருமணத்திற்கு தயாரானார் பிரபல பாடகி!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், 3-வது திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் இதற்கு முன் ஜேசன் ஆலன் அலெக்சாண்டர் மற்றும் கெவின் பெடர்லைன் உடனான திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இதனையடுத்து, 2008-ம் ஆண்டு முதல் தமது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில், பிரிட்னி ஸ்பியர்ஸ் வாழ்ந்து வந்தார்.தனது நீண்டகால காதலரான சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொள்ள அவரது தந்தை அனுமதி மறுத்துள்ளார். இந்நிலையில், தமது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேற, பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு அனுமதி வழங்கி, அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதனையடுத்து பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கும், சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இது தொடர்பாக காதலர்கள் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இருப்பினும் திருமணம் எங்கு, எப்போது நடைபெறும் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை.