வாகன விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்.. மருத்துவமனையின் அறிக்கையால் ரசிகர்கள் சோகம்

வாகன விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்.. மருத்துவமனையின் அறிக்கையால் ரசிகர்கள் சோகம்

பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தெலங்கானா மாநிலம் மாதபூர் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் அவருக்கு உடலில் நெஞ்சுப் பகுதி, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது

பின்பு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அவருக்கு, மூளை மற்றும் இதர முக்கிய பாகங்களில் பாதிப்பு இல்லை. அவரது தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். 

அவர் விரைவில் குணமாக வேண்டும் என பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.