பிரபல நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு...!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் வெங்கட் சுபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இறப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் உட்பட அனைவரும் கொரோனாவின் 2வது அலையில் சிக்கி மடிக்கின்றனர்

இந்நிலையில் நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த வெங்கட் சுபா, டூரிங் டாக்கிஸ் என்ற யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வந்தார். தயாரிப்பாளராக இருந்த இவர் மொழி, கண்ட நாள் முதல், அழகிய தீயே உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.