வசூலை அள்ளி குவிக்கும் டாக்டர்..... மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள டாக்டர் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசூலை அள்ளி குவிக்கும் டாக்டர்..... மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இந்த படம் கடந்த 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

நகைச்சுவைக்கு முக்கியதுவம் கொடுத்து உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்த படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.