டிஜிட்டல் முறையில் ஓவியங்கள்...டிஜிட்டல் டிரீம்ஸ் கலை கண்காட்சி!!

டிஜிட்டல் முறையில் பல்வேறு வகையான ஓவியங்களை பார்வையிடுவதற்கான டிஜிட்டல் டிரீம்ஸ் கலை கண்காட்சி சென்னையில் தொடங்கியது

சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.ஐ.டி காலனியில் டிஜிட்டல் டிரீம்ஸ் கலை கண்காட்சியை,  இயக்குநர்கள் மணிரத்னம், மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். ஓவியர் ரவி பேலட் ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் முறையிலான பல்வேறு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி, வரும் 25 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய ஓவியர் ரவி பேலட், இந்த கண்காட்சி மூலம் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு மணிரத்னம் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதாகவும், தமிழ் சினிமாவில் முக்கியமான, எல்லாரும் பார்த்து வியந்தவர் மணிரத்னம் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும் டிஜிட்டல் ஓவியத்தை யாரும் ஓவிய கலையாக பார்ப்பது இல்லை என்று வேதனை தெரிவித்த அவர், அந்த டிஜிட்டல் ஓவியத்தை வரைந்து பார்க்காமலே, அதை குறை சொல்ல வேண்டாம் என்றார். திரும்பவும் ஒரு வட்டத்திற்குள்ளாக ஒரு ஓவியத்தை பார்க்காமல் அதை வேறு கோணங்களில் பல விதமாக பார்க்க வேண்டும், அதனை காட்ட வேண்டுமென்ற ஆசை இருக்கிறது என்று கூறினார்.

இதையும் படிக்க || "அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவமனைகள்; ஆனால் திமுக ஆட்சியில்?" இபிஎஸ்!!