அருண் மாதேஸ்வரனுடன் இணையப் போகும் தனுஷ்...

இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் அடுத்து இணைய விருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

அருண் மாதேஸ்வரனுடன் இணையப் போகும் தனுஷ்...

தற்போதைய தமிழ் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகராக வலம்வந்துகொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். ஒவ்வொரு வாரமும் ஓய்வின்றி புதுப்புது படங்களின் படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டு வருகிறார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் தற்போது நடித்துகொண்டிருக்கும் தனுஷ் அடுத்ததாக , ராம்குமார், மாரி செல்வராஜ், இளன், வெற்றிமாறன், செல்வராகவன் ஆகியோரின் படங்களிலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் சாணிகாயிதம் திரைப்படத்தை இயக்கிவரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் அடுத்து இணைய விருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி திரைப்படத்தின் வெளியீடு தேதியை தனுஷ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்படம் வருகின்ற டிசம்பர் 23 அன்று வெளியாகவுள்ளது.