விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் கிரிக்கெட் வீரர்...!!

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் கிரிக்கெட் வீரர்...!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துவரும் புதிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள் ஆகிய படங்களுக்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய முன்ணனி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

எஞ்சிய படப்பிடிப்பை விரைந்து முடித்து படத்தை பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தான். தமிழில் இதுதான் இவர் நடிக்கும் முதல் படமாகும். முன்னதாக இவர் ஹிந்தியில் அக்சார் 2, டீம் 5 உட்பட நான்கு படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.