கழுத்தில் தாலி போடுவது கலாச்சாரத்தில் இல்லை...புது உருட்டு உருட்டும் குக் வித் கோமாளி கனி

கழுத்தில் தாலி காணவில்லையே என்று கேட்ட ரசிகருக்கு இன்ஸ்டாகிராமில் லைவில் கனி கொடுத்த விளக்கம், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கழுத்தில் தாலி போடுவது கலாச்சாரத்தில் இல்லை...புது உருட்டு உருட்டும் குக் வித் கோமாளி கனி

இயக்குநர் அகத்தியனின் மகளான கனி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானர். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன கனி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். கனி இப்போ இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் லைவ்வில் வந்த கனி, ரசிகர் கேட்ட கேள்விக்கு சற்று வித்தியசமாக பதில் அளித்து, மாட்டிக்கொண்டுள்ள விவகாரம் பேசும் பொருளாகி உள்ளது.

அதில், ரசிகர் ஒருவர், கனி நீங்கள் அழகான புடவை கட்டி இருக்கிறீர்கள். ஆனால் கழுத்தில் மட்டும் ஏன் தாலி போடவில்லை என்று கேட்டிருந்தனர். இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல் அவருடைய யூடியூப் சேனலிலும் இதே சந்தேகத்தை கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலளித்த கனி, 

தாலி போடுவது தமிழ் கலாச்சாரத்தில் இல்லை அது இடையில் தான் வந்து சேர்ந்திருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தில் எனக்கு தெரிந்து மாலை மாற்றி இவன் தான் எனக்கு இவள் எனக்கு என்று மனதார ஏற்றுக் கொண்டாலே போதும் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு மஞ்சள் கயிற்றில் தாலி போடுவது தான் ரொம்பவும் பிடிக்கும். அதை எனது கணவர் எனக்கு கட்டினார். ஆனால் அதற்கு பிறகு தாலி மாற்றுவதற்காக உறவினர்கள் எல்லாம் அதை மாற்றி விட்டு போட்டு விட்டனர். ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை . 

என் கணவர் கட்டாத தாலியை எதுக்கு கழுத்தில் போட்டு கிட்டு என்று கழற்றி வைத்திருக்கிறேன். ஆனால் என் கணவர் கட்டிய தாலியை பத்திரமாக வைத்து என் உயிருக்கும் மேலாக பாதுகாத்து வருகிறேன் என்று காதல் பொங்க கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எனக்கு போட்டோஸ் எடுக்கும் போது மட்டும் அந்த தாலியை போட்டுக்கிட்டு மத்த நேரத்தில் அதை கழற்றி வைத்துவிட்டு இருக்கிறது பிடிக்கவில்லை. அதனால் தான் நான் எப்போதுமே போடவில்லை என்று தன்னுடைய விளக்கத்தை கூறியிருக்கிறார்.

ஒரு பிரபலமான நடிகை இவ்வாறு பேசியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் போடாம இருங்க அத விட்டுட்டு இப்படி இது கலாச்சாரமே இல்லை என்று கூறுவது முறையல்ல என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.