8 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சின்மயி.. வாடகைத்தாய் மூலம் இல்லை என விளக்கம்!!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வளம் வரும் சின்மயி-க்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது.

8 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சின்மயி.. வாடகைத்தாய் மூலம் இல்லை என விளக்கம்!!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வளம் வரும் சின்மயி-க்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது என்றும் அவரின் பெயர்களையும் அவர் ரிவீல் செய்து செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

8 ஆண்டுகளுக்கு பிறகு பாடகி சின்மயி-க்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இது வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை இல்லை
என்றும் விளக்கியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவிந்திரனை திருமணம் செய்து கொண்ட பாடகி சின்மயி சுமார் 8 ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகியுள்ளார். பல வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் தற்போது தாயானேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை சின்மயி பகிர்ந்துள்ளார். மேலும் குழந்தைகளின் பெயர்களையும் சின்மயி பகிர்ந்துள்ளார்.

பெண் குழந்தைக்கு த்ரிப்த்தா என்றும் ஆண் குழந்தைக்கு ஷர்வாஸ் என்றும் பெயர் சூட்டிய சின்மயி, குழந்தைகளின் பிஞ்சு விரல்களை ஷேர் செய்து எனக்கும் ராகுலுக்கும் இனி இவர்கள் இருவரும் தான் உலகம் என்று உணர்ச்சி பொங்க தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது வாடகைத் தாயா எனக் கேட்டு சில நெட்டிசன்கள் எனக்கு நேரடியாக மெசேஜ் செய்திருந்தனர். மேலும், நீங்கள் கர்ப்பமாக இருப்பதை கூட அறிவிக்கவில்லை, அப்போது எடுத்த புகைப்படங்களை பகிரவில்லை என்றனர்.

நான் கர்ப்பமாக இருந்த விஷயம் எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். முன்னதாக சொல்லியிருந்தால் அதற்கு பல கதைகள் உருவாக்கி மனசுக்கு கஷ்டத்தை கொடுத்திருப்பார்கள். அதனால்தான் வெளியே சொல்லவில்லை என சின்மயி விளக்கம் அளித்திருக்கிறார். பாடகி சின்மயியை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.