பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் ”பீஸ்ட்” : 5 மொழியிலும் வெளியான அட்டகாசமான போஸ்டர்!

'பீஸ்ட்’ பான் இந்திய திரைப்படமா வெளியாகிறது..!

பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் ”பீஸ்ட்” : 5 மொழியிலும் வெளியான அட்டகாசமான போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக வெளியானது. இதனால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என்ற அறிவிப்பை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ‘பீஸ்ட்’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ரா’ என்ற பெயரிலும் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதே சமயம் ‘’பீஸ்ட்’’ படத்தின் இந்த ஐந்து மொழி போஸ்டரின் பின்னணியிலும் மால் செட் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.