குட்டி பட்டாசை மிஞ்சும் அஷ்வினின் அடுத்த பாடல்...  நம்பர் ஒன் ட்ரெண்டிங்.. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

அஷ்வின் மீண்டும் ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்

குட்டி பட்டாசை மிஞ்சும் அஷ்வினின் அடுத்த பாடல்...  நம்பர் ஒன் ட்ரெண்டிங்.. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஷ்வின்.
கு இந்நிகழ்ச்சி மூலம் ஏராளமான பெண்கள் ரசிகைகள் அஷ்வினுக்கு உருவாகினார். இந்நிகழ்ச்சியின் மூலம் அஷ்வின் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமின்றி தற்போது இவர் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் படங்களுக்கு இணையாக ஆல்பம் பாடல்களும் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அஷ்வின் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், மற்றும் லோனர், கிரிமினல் கிரஸ் போன்ற ஆல்பம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் அஷ்வின் மீண்டும் ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அடிபொலி என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பாடலில் அஷ்வினுக்கு ஜோடியாக குஷீ ரவி நடித்துள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ள இப்பாடலை பிரபல மலையாள நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது அடிபொலி பாடலின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்பாடல் நேற்று வெளியாகவுள்ளது.