முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா...!!

முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட நடிகர் ஆர்யா மற்றும் சயிஷா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா...!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காப்பான்,டெடி,கஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில்,தம்பதியினருக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு பிறகு,குழந்தை பற்றிய எந்த விபரமும் வெளியிடவில்லை. தற்போது குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகிய நிலையில், முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்டுள்ளார் நடிகர் ஆர்யா.


அதன்படி அக்குழந்தைக்கு ‘ஆரியானா’ என பெயர் சூட்டி உள்ளனர். இதையடுத்து ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.