அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...

அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.இதில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா்.

 

கொரோனா பரவல் காரணமாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாதபோதிலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இதனால் பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

 

இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடித்துக் கொடுத்துவிட்டு சிகிச்சைக்காக ரஜினிகாந்த் அமெரிக்க சென்றுள்ள நிலையில், அண்ணாத்த படம்

நவம்பர் 4 தீபாவளிக்கு வெளியாகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.