லட்சுமி ராமகிருஷ்ணணுக்கு, அன்னபூரணி அரசு எச்சரிக்கை... நடந்தது என்ன?

யூ-டியூபில் ட்ரெண்டான அன்னபூரணி அரசு அம்மா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

12 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு மனைவியை தவிக்க விட்டு வந்த அரசுவும், கணவனுக்கு பட்டை அடித்து விட்டு ஓடி வந்த அன்னபூரணியும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழ்நாட்டுக்கே அறிமுகமானார்கள். 

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு காணாமல் போன கள்ளக்காதல் ஜோடி திடீரென ஆன்மிகத்தில் இறங்கியது. 2016-ம் ஆண்டு திடீரென அன்னபூரணி அரசு அம்மாவாக அவதரித்தவர் குலுங்கி குலுங்கி தம் அருளாசியை காட்டி கல்லா கட்டத் தொடங்கினார். 

தற்போது திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் ராஜா தோப்பு பகுதியில் அன்னபூரணி அரசம்மன் திருக்கோயில் ஒன்றை கட்டி வருவதோடு,  தனி யூ-டியூப் சேனலையும் நடத்தி வருகிறார் அன்னபூரணி.  இந்த கோயிலில் அன்னபூரணியை போல பிரமாண்ட சிலையையும் நிறுவி அதனையும் காட்சிப் பொருளாக்கியுள்ளனர் கோயில் நிர்வாகத்தினர். 

இந்நிலையில் அன்னபூரணி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது ஒரே அடியாக பாய்ந்து குதறும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கடந்த வாரம் நிருபர்களை சந்தித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பல குடும்பங்கள் ஒன்றிணைந்ததாகவும், அந்த நிகழ்ச்சியால் நல்ல பலன் கிடைத்ததாகவும் கூறியிருந்தார். இதனை பார்த்த அன்னபூரணி, இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களை விடுத்துள்ளார். 

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர், அன்னபூரணிக்கு போன் செய்து புலம்பியதாகவும், இன்னும் சிலர் தற்கொலையே செய்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். பணம் கொடுத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்வது தான் லட்சுமி ராமகிருஷ்ணனின் வேலை என்றும் பணத்துக்காக பலரது வாழ்க்கையை அழித்தவர் என்றும் கரித்துக் கொட்டியிருக்கிறார்.  

தங்கள் காதலின் புனிதத்தை உணர்த்துவதற்காகவும், இதனால் பிரபஞ்சத்தில் ஒரு மாற்றம் நிகழும் என்பதை மனதில் வைத்தே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக குறிபிட்டுள்ளார்.

இதையும் படிக்க || டெண்டர் முறைகேடு வழக்கு... இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!