ஷாருக்கான் படத்தில் இணையும்  அனிருத்?

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானின் நடிக்கவுள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஷாருக்கான் படத்தில் இணையும்  அனிருத்?

தென்னிந்திய நட்சத்திர இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாருக்கான் தற்போது நடித்து வரும் பதான் படத்தின் படப்பிடிப்பை முடித்த பின் அட்லீ  இயக்கத்தில் உருவாகும் புதிய  படம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்கிறார்கள்.

இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து இயக்குனர் தரப்பில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

இந்நிலையில்,ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரகுமான் இசையில் பாடல் ஒன்றை பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.