சமந்தா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் அல்லு அர்ஜுனின் மகள்!

நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சமந்தா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் அல்லு அர்ஜுனின் மகள்!

தெலுங்கில் அல்லு குடும்பத்தினர் கடந்த நான்கு தலைமுறைகளாக திரைத்துறையில் இருந்து வருகின்றனர். தற்போது அல்லு குடும்பத்தின் நான்காவது தலைமுறையினர் அதாவது அல்லு அர்ஜுனின் மகளான அர்ஹா, சமந்தா நடிக்கும் 'சகுந்தலம்' படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சகுந்தலம் படக்குழுவினர் முக்கியமான கதாபாத்திரத்திற்காக அர்ஹாவை நடிக்க அழைத்ததாகவும், படத்தின் கதையைக்  கேட்ட பிறகு அல்லு குடும்பத்தினர் அர்ஹாவை சகுந்தலம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.