என்னங்க சொல்றீங்க: ’அண்ணாத்த’, ’மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் வசூலை அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் முறியடிச்சிடுச்சா...

என்னங்க சொல்றீங்க: ’அண்ணாத்த’, ’மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் வசூலை அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் முறியடிச்சிடுச்சா...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூலை அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரீலிஸ் தேதி தள்ளி தள்ளி போனதால் அஜித்தின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்நிலையில்  ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நேற்று பல்வேறு திரையரங்குகளில் வெளியானது வலிமை திரைப்படம். 

தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் காலை 4 மணிக்கே திரையிடப்பட்ட ‘வலிமை’  படத்திற்கு கூட்டம் கூட்டமாக அலைமோதிய ரசிகர்கள் அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி வந்தனர்.

அதிலும் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்காக முன்னணி தியேட்டர் ரோகினி சில்வர்ஸ்கிரீனில் சுமார் 23,000 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது என திரையரங்குகளின் மேலாளர் நிகிலேஷ் சூர்யா டுவீட் செய்துள்ளார்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியான ‘வலிமை’ படம் முதல் நாளிலே 36 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் குறிப்பாக சென்னையில் மட்டுமே 1.82 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான அஜித் படங்களில் இதுவே அதிக வசூல் செய்த படமாகவும் கூறப்படுகிறது. 
மேலும் கடந்த வருடம் வெளியான ரஜினியின் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய்யின்  ‘மாஸ்டர்’ பட வசூல் சாதனையையும் ‘வலிமை’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.