வலிமை அடுத்தவன காப்பாத்த தான், அழிக்க இல்ல!! படத்தில் சொன்னதை நிஜத்தில் செய்த அஜித் குமார்.!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படத்தில் ரீலிஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வலிமை அடுத்தவன காப்பாத்த தான், அழிக்க இல்ல!! படத்தில் சொன்னதை நிஜத்தில் செய்த அஜித் குமார்.!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதியளிக்க வேண்டும் என தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி இன்றிலிந்து இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இதனால் இரவில் தியேட்டர்களை மூடவேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் ,பிரபாஸின் ராதே ஷியாம் போன்ற படங்களில் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆதலால் வலிமை திரைப்படம் திட்டமிட்டப்படி பொங்களுக்கு வெளியாகுமா? அல்லது ரீலிஸ் தேதியில் ஏதேனும் மாற்றம் உண்டாகுமா என்ற செய்திகளும் வெளியாகிக்கொண்டிருந்தன.

இந்தநிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் வலிமை படத்தை ரீலிஸ் தேதியை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.