”ஜெயிலர்” படத்திற்காக ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த தனியார் நிறுவனம்...!

”ஜெயிலர்” படத்திற்காக ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த தனியார் நிறுவனம்...!

தமிழ்நாட்டில் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தொடங்கியது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்  'ஜெயிலர்' திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியின் 169-வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இதையும் படிக்க : அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; தாமாக முன்வந்து உயர்நீதி மன்றம் விசாரணை!

உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம்,  தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வெளியானது. ஆனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, இன்னும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சி, காலை 9 மணிக்கு தொடங்கியதால், ரசிகர்கள் ஆரவாரத்துடன் படம் பார்ப்பதற்கு சென்றனர். மேலும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் ஜெயிலர் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அந்நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.