பிரபல நடிகருடன் முதன்முறையாக ஜோடி சேரும் த்ரிஷா...! யாருன்னு தெரியுமா..?

கடந்த 20 வருட திரைப்பயணத்தில் நடிகை த்ரிஷா  இதுவரை ஜோடி சேராத பிரபல நடிகருடன் ஜோடியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகருடன் முதன்முறையாக ஜோடி சேரும் த்ரிஷா...! யாருன்னு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. ”மெளனம் பேசியதே” என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு நடிக்க தொடங்கினார். அப்படி இவர் நடிப்பில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் ஜெசி என்ற இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.   தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தன் கால் தடத்தை பதித்து வெற்றிக்கண்டார். 

இப்படி பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வெற்றி கண்ட நடிகை த்ரிஷா, தற்போது முதல் முறையாக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை, ’த்ரிஷ்யம்’ என்ற படத்தை எடுத்ததன் மூலம் உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார். ”ராம்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் மோகன்லால் - நடிகை த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்க இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா தொற்றால் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு படத்தை எடுக்க முயற்சித்தபோது மோகன்லால் வேறு சில படங்களில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் தற்போது  ‘ராம்’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதால், இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.