சரக்கு விளம்பரத்தில் கவர்ச்சி உடையில் நடனமாடிய சமந்தா... சர்ச்சையில் சிக்கிய சம்மு!!

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.   

சரக்கு விளம்பரத்தில் கவர்ச்சி உடையில் நடனமாடிய சமந்தா... சர்ச்சையில் சிக்கிய சம்மு!!

தமிழில்  ‘பாணாக்காத்தாடி “ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சமந்தா, தொடர்ந்து நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யனும் குமாரு, 24, அஞ்சான், கத்தி, தெறி போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்  பிடித்தார்.

படத்தில் மட்டுமில்லாது வெப்சீரிஸிலும் கவனம் செலுத்த தொடங்கிய நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். அதில் இவருடைய கதாபாத்திரத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதற்கு விளக்கம் அளித்த அவர், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அதில் நடிக்கவில்லை. எனது நடிப்பு யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஆனால் திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார். 

இதேபோன்று சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்துக்கும் ஆண்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்தன. பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா மதுபான விளம்பரம் ஒன்றில் நடித்து இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இவர்கள் நடிப்பு ரசிகர்கள் பலரையும் மது குடிக்க தூண்டுவதாக? அமையும் என்று சமந்தாவை கண்டித்து சோஷியல் மீடியாவில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த பதிவுகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.