சில்லுன்னு காத்து வாங்கியபடி ஸ்கேட்டிங் செய்யும் சமந்தா...! இணையத்தில் வைரலாகும் வீடியோ

சில்லுன்னு காத்து வாங்கியபடி ஸ்கேட்டிங் செய்யும் சமந்தா...! இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை  சமந்தா. திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது மன அமைதிக்காக சுற்றுலா செல்வதிலும் ஒரு பக்கம் பிஸியாக இருந்து வருகிறார்.

தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து கொண்டிருக்கும் சமந்தா, சமீபத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்து வெளியான புஷ்பா திரைப்படத்தில் அமைந்துள்ள  ’ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு  நடனமாடி இருந்தார். சமந்தா நடனமாடிய இந்த பாடல் சென்சேஷனல் ஹிட்டாகியது.

இதனைத்தொடர்ந்து தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் 2 புதிய படங்களில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமாகியுள்ள சமந்தா, ஏற்கனவே ‘சாகுந்தலம்’, ’யசோதா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்து முடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது தோழியுடன் இணைந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் சில்லுன்னு காத்து வாங்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் பனி பிரதேசம் நடுவில் ஸ்கேட்டிங் செய்யும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் இலட்சக்கணக்கான லைக்ஸையும், நூற்றுக்கணக்கான கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.