விஜய்க்கு ஜோடியாகிறாரா நடிகை கீர்த்தி சுரேஷ்.?

விஜய்க்கு ஜோடியாகிறாரா நடிகை கீர்த்தி சுரேஷ்.?

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தான் பிஸ்ட். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வந்துவிட்டது. 
தெலுங்கு இயக்குனர் வம்சி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன.

விஜய் படங்களின் அறிவிப்புகள் வந்த உடனேயே ஹீரோயின் யார் என்ற கேள்வி தான் அனைத்து தரப்பிலும் விவாதமாகும். இப்படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் 'பைரவா', 'சர்கார்' படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது