சாண்டியின் முதல் மனைவிக்கு திருமணமாம்.!! மாப்பிள்ளை பிக்பாஸ் பிரபலமா..? 

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்தவர் நடிகை காஜல் பசுபதி.

சாண்டியின் முதல் மனைவிக்கு திருமணமாம்.!! மாப்பிள்ளை பிக்பாஸ் பிரபலமா..? 

கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதன் கோரியோகிராஃபரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மண வாழ்வில் கசப்பு ஏற்பட்டு சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை காஜல்  அவ்வபோது அரசியல் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருவார்.

இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது சமூகவலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் திருமணம். கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல. தப்பா எடுத்துக்காதிங்க என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் மாப்பிள்ளை யாரு என்று கேட்டு வருகின்றனர்.மேலும் அவரது புதிய கணவரும் ஏற்கனவே பிக் பாஸில் கலந்துகொண்டவர்தான் என்ற தகவல்களும் பரவி வருகிறது.