நயன்தாரா போல் அச்சு அசலாக மாறிய நடிகை அனிகா...இணையத்தை கலக்கும் போட்டோ ஷூட்!!

சமீப காலமாகவே போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களை அசத்தி வரும் நடிகை அனிகா. 

நயன்தாரா போல் அச்சு அசலாக மாறிய நடிகை அனிகா...இணையத்தை கலக்கும் போட்டோ ஷூட்!!

குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை அனிகா தற்போது ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய போட்டோஷூட் மூலம் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

முதலில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா கிட்டதட்ட 9 படங்களுக்கு மேலாக தொடர்ந்து நடித்து வந்தார். அதன்பின் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் முதல் படமே அவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது என்றே சொல்லலாம். 

அதனையடுத்து நானும் ரவுடித்தான், மிருதன், விஸ்வாசம், மாமனிதன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் என்னதான் படங்களில் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் குழந்தை நட்சத்திரமாகவே சுமார் 20 படங்கள் வரை நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையெல்லாம் தோற்கடிக்கும் விதமாக அவ்வப்போது அவர் வெளியிடும் போட்டோ ஷூட் தான் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். இதுவரை அவர் நடத்த படங்களை விட, அனிகா நடத்திய போட்டோ ஷுட்களுக்கு கணக்கே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு  கொரோனா நேரத்தில் ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் அவர் புடவையில் ஒரு போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக நயந்தாரா போலவே இருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அனிகாவின் போட்டோவை பார்த்தால் இந்த லுக்கில் நம்மலுக்கு கூட அப்படிதான் தோன்றும், அந்த அளவிற்கு அச்சு அசலாக நயன் போலவே உள்ளார்.